"நீ என்னை ஏமாத்திட்ட" கத்திய திவ்யா...! கூலாக வீடியோ எடுத்த அர்ணாவ்...!
தனது மனைவிக்கு மன ரீதியான பாதிப்பு இருந்ததாக கூறி, அர்ணவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் திவ்யா (35). இவருக்கு 2012ல் திருமணம் நடந்து 6 வயதில் மகள் உள்ளார். பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். பின்னர் சின்னத்திரை தொடரில் கதாநாயகியாக நடித்தார். அப்போது, அதே தொடரில் கதாநாயகனாக நடித்த அர்ணவுடன் காதல் ஏற்பட்டு பதிவு திருமணம் செய்தார். இதற்கிடையே திவ்யா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதற்கிடையே அர்னவுக்கு மற்றொரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து திவ்யா அவரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். பிறகு அர்னவ் திவ்யாவை பிரிந்து அந்த நடிகையுடன் நெருக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே திவ்யா தனது திருமணம் குறித்தும், காதல் கணவர் நடிகர் அர்ணவ் குறித்தும் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டார்.
இது வைரலானது.
இதை தொடர்ந்து நடிகர் அர்ணவ் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தானும், திவ்யாவும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி ஒரு குழந்தை உள்ளது தற்போது தான் தனக்கு தெரியும் எனவும், இருந்தாலும், அவருடன் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் தற்போது நான் வெறோருவருடன் தொடர்பில் உள்ளதாக திவ்யா தன்னை சந்தேகப்படுவதாக அந்த புகாரில் தெரிவித்தார்.
இந்நிலையில், அர்னவ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திவ்யா பரபரப்பு புகார் அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது கணவர் சின்னத்திரை நடிகை அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து எனது கணவரிடம் கேட்ட போது முறையாக பதில் கூறிவில்லை. என்னை கேலி செய்யும் வகையில், என் முன்பே அந்த நடிகைக்கு போன் செய்து 'ஐ லவ் யூ' என்று கூறி முத்தம் கொடுத்தார்.
இதனால் மனமுடைந்த நான் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டேன். எங்களது திருமண போட்டோ மற்றும் வீடியோவையும் வெளியிட்டேன். நான் அர்னவால் கர்ப்பமாக இருக்கிறேன். இதுகுறித்து நான் எந்த விபரங்களும் வெளியிட கூடாது என்று அர்னவ் மிரட்டி வருகிறார். நான் நடிக்கும் ஷூட்டிங் பகுதிக்கு வந்த நடிகை அன்ஷித்தாவிடம் கேட்டபோது அவர் என்னை தண்ணீர் பாட்டிலை தூக்கி அடித்தார். அதோடு இல்லாமல் எனது குழந்தை வயிற்றிலேயே செத்து போக வேண்டும் என்று சாபம் விட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் அர்னவ் கீழே தள்ளியதால் நான் மயக்கமடைந்தேன்.
அதன் பிறகு எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனே தெரிந்தவர்கள் உதவியுடன் நான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனது கணவர் அர்னவுக்கு படப்பிடிப்பு இல்லாத காலத்தில் நான் சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கினார்.
நான் எனது கணவருடன் வாழ விரும்புகிறேன். ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டார். என்னுடையே வாட்ஸ் அப், செல்போன், இன்ஸ்டாகிராம் பக்கம் என அனைத்தையும் பிளாக் செய்து விட்டார். என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சின்னத்திரை நடிகர்களான அர்ணவ் - திவ்யா தம்பதிக்கு இடையே நிலவி வரும் குடும்பப் பிரச்சினையில், பரஸ்பரம் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், தனது மனைவிக்கு மன ரீதியான பாதிப்பு இருந்ததாக கூறி, அர்ணவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நான் உன்னை லவ் பண்றேன். ஆனா நீ என்னை ஏமாத்திட்ட அந்த பொண்ணு மட்டும் இல்ல நானும் சூசைட் அட்டென்ட் பண்ண ட்ரை பண்ணுவேன். ஏன்னா நீ அந்த மாதிரி ஒரு துரோக காரன் என்று கத்தி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அர்ணாவ் நீ தான் எனக்கு துரோகம் செய்து இருக்க புருஷன் குழந்தைகளை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து இருக்க என்று பேசுகிறார். ஆனால் அப்போதும் அர்ணாவ் முகம் அதில் தெரியவில்லை.