கிராமசபை கூட்டத்தை துணைத்தலைவர், உறுப்பினர்கள் புறக்கணிப்பு

தலைவரின் கணவர் தலையீட்டை கண்டித்து கிராமசபை கூட்டத்தை துணைத்தலைவர், உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்தனர்.

Update: 2023-05-01 17:11 GMT

பேரணாம்பட்டு ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார், அமலு விஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பொதுமக்கள் பாலூர் ஊராட்சிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவு படுத்தி குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் கலந்து ஆலோசனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஜனார்த்தனன், டேவிட், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி, வள்ளி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் கணவர் சவுந்தர்ராஜன் ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் துணைத் தலைவர் ஜீவிதா செந்தில், வார்டு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஏழுமலை, மணிகண்டன், ரோஸ்லின், கோவிந்தராஜ், ரவி ஆகிய 7 பேர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்