பாலையம்பட்டி வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல் நடைபெற்று வருகின்றது.;

Update: 2022-07-09 04:21 GMT

பாளையம்பட்டி,

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. ஊரக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த காலியிடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. அதன்படி அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியில் 3 வது வார்டு உறுப்பினர்கள் உயிரிழந்த காரணத்தினால் காலியாக இருந்த மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

3-வது வார்டில் மொத்தம் 959 வாக்குகள் உள்ளன. அதில் ஆண் வாக்காளர்கள் 467 பெண் வாக்காளர்கள் 492 பேர் ஆவார்கள். பாலையம்பட்டியில் உள்ள பிபிவிசாலா பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்