விபூதி காப்பு அலங்காரத்தில் வடுகபைரவர்
விபூதி காப்பு அலங்காரத்தில் வடுகபைரவர் காட்சியளித்தார்;
சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட தர்ம வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வடுகபைரவர் அமைந்துள்ளார். வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் சன்னதி முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து வடுக பைரவருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. மலர் மாலையுடன் விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வடுக பைரவர் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.