பொங்கல் திருநாளுக்கு பொதுமக்களுக்கு வழங்க காங்கயம் தாலுகா அலுவகத்திற்கு முதற்கட்டமாக 57 ஆயிரம் வேட்டி சேலைகள் கொண்டு வரப்பட்டது.
இலவச வேட்டி-சேலை
தமிழகத்தில் வருட வருடம் பொங்கல் பண்டிகைக்கு வறுமைக்கு கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இதனால் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களும், தொழில் வாய்ப்பு பெற்று பயனடைகின்றனர். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இத்துடன், இலவச வேட்டி, சேலையும் வழங்க உள்ளது.
காங்கயம் தாலுக்காவில் உள்ள 44 வருவாய் கிராமங்களில் 78 ஆயிரத்து 744 ரேஷன் அட்டைதார்கள் தகுதியானவர்கள் ஆவார். இந்த அட்டை தார்களுக்கு அரசு சார்பில் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து காங்கயம் தாசில்தார் அலுவலகத்துக்கு முதல் கட்டமாக 27 ஆயிரம் வேஷ்டிகளும், 30 ஆயிரம் சேலைகளும் வந்துள்ளது.
57ஆயிரம் வேட்டி-சேலைகள் வந்தது57ஆயிரம் வேட்டி-சேலைகள் வந்தது
பொதுமக்களுக்கு வழங்க 44 வருவாய் கிராமங்களுக்கு அவற்றை பிரித்து அனுப்பும் பணி வரும் நாட்களில் நடைபெறும்.
இப்பணியை காங்கயம் தாசில்தார் தலைமையில் வருவாய்துறையினர் செய்து வருகின்றனர்.