கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது;

Update: 2023-09-29 18:45 GMT

இளையான்குடி கால்நடை ஆஸ்பத்திரியில் உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். இளையான்குடி கால்நடை மருத்துவர் டாக்டர் முருகன் முன்னிலை வகித்தார். முகாமில் பல்வேறு வகையான நாய்களுக்கு சிறப்பு பரிசோதனை, வெறிநோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், உன்னி, பேன் நீக்கம், ஆண்மை நீக்கம் ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 73 நாய்களுக்கு பரிசோதனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

மானாமதுரையில் கால்நடை பராமரிப்பு துறை, மானாமதுரை நகராட்சி இணைந்து கால்நடை மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவர் விக்னேஷ், ஆணையாளர் ரெங்கநாயகி, நகர்மன்ற துணை தலைவர் பாலசுந்தரம், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், சுகாதார ஆய்வாளர் ராமநாதன், துப்புரவுபணி மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரினி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக உலக ரேபிஸ்நோய் தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்