சோழமாதேவி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

சோழமாதேவி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-25 18:45 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கோடாலி கருப்பூர் கால்நடை டாக்டர் வாசுகி தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் ஆயிரத்து 24 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில், 78 மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு பொது சிகிச்சையும், 43 வெள்ளாடுகளுக்கு ஆண்மை நீக்கம் செய்தல், 62 பசுக்களுக்கு கர்ப்பப்பை சிகிச்சை, 88 பசு மற்றும் எருமைகளுக்கு ஸ்கேன் பரிசோதனை மூலம் கர்ப்ப பரிசோதனை, 100 பசு மற்றும் எருமைகளுக்கு தாது உப்பு கலவை ஆகிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதேபோன்று 248 கன்றுகள், மாடுகள், 20 எருமைகள், 50 செம்மறி ஆடுகள், 627 வெள்ளாடுகள் ஆகியவற்றுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. கன்றுகளை வளர்ப்பதில் சிறப்பாக செயல்பட்ட 6 விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 10 விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக்கு தேவையான புல் கருணைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்