கால்நடை மருத்துவ முகாம்
பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.;
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரத்தங்கம் தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் கலைவாணி, சிவசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, தடுப்பூசி போடுதல், மலடுநீக்கம், குடற்புழு நீக்கம், பெரியம்மை தடுப்பூசி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.