கால்நடை மருந்தகம் தொடக்க விழா

தட்டார்மடம் அருகே கால்நடை மருந்தகம் தொடக்க விழா நடந்தது.;

Update: 2023-09-23 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே போலையர்புரம் கிராமத்தில் உள்ள கால்நடை கிளை மருந்தகத்தை தரம் உயர்த்திட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கமங்கலத்தில் தொடங்கி வைத்தார். இதனையொட்டி போலையர்புரத்தில் கால்நடை மருந்தகம் தொடக்க நிகழ்ச்சிக்கு கால்நடை உதவி மருத்துவர் காயத்ரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஏசுவடியான், சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டேவிட் வேதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜார்ஜ்மணி வரவேற்றார். இதில் சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலாளர் லூர்துமணி, ஆசிரியர் ராஜசேகர், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பெனிஸ்கர் ஆகியோர் பேசினர்.

இதில் போலையர்புரம் பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் பலர் கலந்து கொண்டனர். கால்நடை ஆய்வாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்