காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி; கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார்.;

Update: 2023-07-06 11:08 GMT

வரும் நாடாளுமன்ற தேர்தல் - 2024-ஐ முன்னிட்டு, காஞ்சீபுரத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு கிராமத்தில் காஞ்சீபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது.

இந்த பணிகள் காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டர் மற்றும் தொடர்பு அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் காலை 9 மணி முதல் இரவு 7 வரை பெல் நிறுவன என்ஜினீயர்களால் 10.8.2023 வரை தொடர்ந்து (ஞாயிறுக்கிழமை தவிர) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்