வேலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-12 19:49 GMT

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். செயலாளர் வேதநாயகம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.

கூட்டத்தில் 2023- 2024-ம் ஆண்டு 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் (மாவட்ட ஊராட்சி) 7 ஊராட்சி ஒன்றியங்களில் வரையறுக்கப்பட்ட நிதி, மற்றும் வரையறுக்கப்படாத நிதியின் கீழ் பணிகள் தேர்வு மற்றும் மாநில நிதிக்குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) முதல்கட்டபணிகள் தேர்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் வரவு, செலவு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்