வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய விழா - நாகை மாவட்டத்திற்கு 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2022-09-04 04:06 GMT

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 29-ஆம் தேதி முதல் வரும் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா வரும் 8-ந் தேதி நடைபெறுகிறது.

இதனால், நாகை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை இதனை ஈடு செய்யும் விதமாக வரும் 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.    

Tags:    

மேலும் செய்திகள்