போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-13 18:05 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

பறிமுதல் செய்ய வேண்டும்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

சட்டம், ஒழுங்கு ஏற்படும் பகுதிகளில் காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு வழங்கி கோர்ட்டு வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சி பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பரிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.

டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை

நகராட்சிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்ற தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் யாரும் பஸ்களில் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்வாதவாறு டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, கலால் உதவி ஆணையர் பானு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ்பாண்டியன், சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்