மதுரை சித்திரை திருவிழாவின் போது வாகனங்கள் சேதம் - 6 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர்.;

Update: 2023-05-07 22:56 GMT

மதுரை,

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்து மதுரை நெல்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை இளைஞர்கள் சிலர் மது போதையில் அடித்து உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கும்பல் அப்பகுதியில் 2 இடங்களில் செல்போன் மற்றும் செயின் திருட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்