வாகன அபராத தொகையை குறைக்க வேண்டும்

வாகன அபராத ெதாகையை குறைக்க வேண்டும் தேசிய சட்ட உரிமைகள் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-11-06 18:45 GMT

திருவாரூரில் தேசிய சட்ட உரிமைகள் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவாரூர் வர்த்தக சங்க மஹாலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் ஜி.டி.மணி கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன், புதுவை மாநில செயலாளர் விஷ்வா, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் மாரிமகேஷ், மாவட்ட செயலாளர் வரதராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கங்கை ஆதித்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் வரம்பு மீறி அபராத தொகை விதிக்கப்படுவதால் பொதுமக்கள் அபாரத தொகை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அபராத தொகையை குறைக்க வேண்டும். உரிய திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்