வாகனம் மோதி டிரைவர் பலி
கூடங்குளம் அருகே வாகனம் மோதி டிரைவர் பலியானார்.;
கூடங்குளம்:
தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவையைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 40). இவர் மினி லாரியில் தேங்காய் ஏற்றிக் கொண்டு நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். கூடங்குளம் அருகே உவாி செல்லும் சாலையில் சென்ற போது, சிறுநீர் கழிப்பதற்காக மினி லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் சாலையை கடந்து மினி லாரியில் ஏறும் போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.