கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீர் உயர்வு

வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-05-13 05:11 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னையின் முக்கிய வணிக சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நகரின் சில பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் விற்பனைக்காக காய்கறி எடுத்து வரப்படுகிறது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் காய்கறி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென அதிகரித்துள்ளது. சில காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்;

* 1 கிலோ பீன்ஸ் ரூ.120க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.200 முதல் ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* ரூ.50க்கு விற்கப்பட்டு வந்த கேரட், தற்போது ரூ70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* 1 கிலோ அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும்,1 கிலோ சேனைக்கிழங்கு ரூ.70க்கும் விற்பனை ஆகிறது.

* 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.70க்கும், 1 கிலோ பூண்டு ரூ.250க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* எலுமிச்சை விலையும் அதிகரித்துள்ளது. 1 கிலோ 70க்கு விற்கப்பட்டு வந்த எலுமிச்சை பழம், தற்போது ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, "கோடை வெயிலால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாகச் சந்தைக்கு 700 முதல் 800 காய்கறி வண்டிகள் வந்துசெல்லும். ஆனால் தற்போது 300 வண்டிகளே வந்து செல்கிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது." என தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்