வீரப்பசாமி கோவில் குடமுழுக்கு

வெள்ளப்பள்ளம் வீரப்பசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது.;

Update: 2022-07-12 18:03 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் அசகண்ட வீரப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 9-ந் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமத்துடன் யாகசலை பூஜை தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று காலை நான்காம்கால யாகசலை பூஜை நடைபெற்று கடம்புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் உற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்