வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா:வருகிற 11-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக் கோன் 313-வது பிறந்தநாள் விழா வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி கோட்டத்தில் பாண்டவர் மங்களம், மந்திதோப்பு ரோடு, சிவஞானபுரம், தளவாய்புரம், செட்டிக்குறிச்சி, அய்யனாரூத்து, கயத்தார், கோவில்பட்டி, குளத்தூர், விளாத்திகுளம், புதூர்பாண்டியாபுரம், ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 32 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் வருகிற 11-ந் தேதி மட்டும் மூடப்படுகின்றன. அன்றைய தினம் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபான விற்பனை செய்ய அனுமதி இல்லை.
மேற்குறிப்பிட்ட தினத்தில் டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.