போதை பொருட்கள் விற்பதை சமூக அமைப்புகள் தடுக்க வேண்டும்- கி.வீரமணி பேட்டி

போதை பொருட்கள் விற்பதை சமூக அமைப்புகள் தடுக்க வேண்டும்- கி.வீரமணி பேட்டி;

Update:2022-08-12 02:53 IST

நம்பியூர்

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவர்களிடையே போதை பொருட்களை திணிப்பது போன்ற தொல்லைகள் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலை அரசு, காவல்துறை மட்டுமல்ல ஆசிரியர்கள், பெற்றோர்களும் கவனமாக கையாள வேண்டும்.

தீய சக்திகள் பள்ளி வளாகங்களில் ஊடுருவாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாணவர்களிடம் கண்ணுக்கு தெரியாமல் மிட்டாய் கொடுப்பது போன்று பல ரூபங்களில் போதை பொருட்கள் வருகின்றன. இதை சமூக அமைப்புகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்