வீர நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம்
மங்கைமடம் வீர நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம்
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் வீர நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச நரசிம்மர் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் ஆண்டு விழா கடந்த 20-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து வீர நரசிம்ம பெருமாள் மேள, தாளம் முழங்க தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் நரசிம்மா, நரசிம்மா என சரண கோஷம் எழுப்பினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.