வீழிநாதசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;

Update: 2023-05-02 18:45 GMT

குடவாசல்:

திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரை திருவிழா

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் வீழிநாதசுவாமி கோவில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவில், தேவார பாடல் பெற்றது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. முன்னதாக 32 அடி உயரம், 20அடி அகலம் உள்ள

தேரில் வீழிநாதர், சுந்தரகுஜாம்பிகை அம்மன், தியாகேசர், விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினா்.

பின்னர் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வீழிநாதா, வீழிநாதா என பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

போலீசார் பாதுகாப்பு பணி

தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று மதியம் 1 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.விழாவில் திருவாவடுதுறை ஆதீன மேலாளர் ராஜேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்