வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரில் யூனியன் கூட்டம் தலைவர் பொன். முத்தையா பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் விஜய பாண்டியன், பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணா தேவி பாலசுப்ரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து கவுன்சிலர்களின் வார்டுகளிலும் உள்ள அடிப்படை மற்றும் அவசர பணிகளை பூர்த்தி செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உதவி பொறியாளர் அருள் நாராயணன், அலுவலர்கள் சிலம்பரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.