கற்பக மகா மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவ விழா

கற்பக மகா மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவ விழா;

Update: 2023-06-12 20:34 GMT

மெலட்டூர்:

பாபநாசம் தாலுகா, மெலட்டூர் சோமாசித்தெருவில் உள்ள கற்பக மகா மாரியம்மன்கோவிலில் வசந்த உற்சவ விழா நடந்தது. இதையொட்டி வெட்டாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சோமாசித்தெரு கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்