கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து வடபழனி முருகன் கோவிலில் வருஷாபிஷேக பூஜை

வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து வருஷாபிஷேக பூஜைகள் நடந்தது.;

Update: 2023-02-11 12:20 GMT

வடபழனி முருகன் கோவிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக கோவிலில் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன.

கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு நாளான நேற்று காலை முதல் கணபதி பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால பூஜை, வேத திருமுறை பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், எஜமான சங்கல்பம், மகா தீபாராதனை நடந்தது.

யாக சாலையில் இருந்து கடப்புறப்பாடு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. முருகனுக்கு 108 எண்ணிக்கை கொண்ட அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

இந்த நிகழ்வில் கோவில் தக்கார் ஆதிமூலம், ஓராண்டு நிறைவு விழா உபயதாரர் மோகன்குமார், நகரத்தார் குழுவை சேர்ந்த வெங்கடாச்சலம், கோவில் துணைக் கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்