வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
நெல்லையில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை மாநகராட்சி பொது சுகாதார பிரிவு சார்பில் பாளையங்கோட்டை குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளியில் 33, 34, 35-வது வார்டு பொதுமக்களுக்கான கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் பல்வேறு நோய்கள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, டாக்டர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், மருத்துவ அலுவலர் சுகன்யா தேவி, டாக்டர்கள் அருள்மதி, அசோக், திவ்யா, டோனி ராஜா மற்றும் செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.