வருமுன் காப்போம் மருத்துவ முகாம்; சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-20 16:46 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஜான் தி பாப்திஸ்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டையை வழங்கினார். முகாமில் இதயம், காது, மூக்கு தொண்டை, பல், கண் நோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு ரத்தப்பரிசோதனை, பிரஷர், இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டன. முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று சென்றனர்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, மருத்துவ அலுவலர்கள் ஜீவராஜ் பாண்டியன், அன்பு மாலதி, சுசிலா, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், தலைவர்கள் பழனிசெல்வி, அருண்குமார், மருத்துவமில்லா மருத்துவ மேற்பார்வையாளர் செல்லையா, ஜான் தி பாப்திஸ்து மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தூர்மணி, சுகாதார ஆய்வாளர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்