சேலம் வழியாக எர்ணாகுளம்- பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கம்

சேலம் வழியாக எர்ணாகுளம்- பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2024-07-28 02:40 GMT

சேலம்,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் வழியாக எர்ணாகுளம்- பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி எர்ணாகுளம்-பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06001) ஜூலை 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 25-ந் தேதி வரை புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 6.33 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையம் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் பெங்களூரு கண்டோன்மெண்ட்- எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06002) ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வியாழன், சனி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.58 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்