வந்தே பாரத் விரைவு ெரயில் இயக்க வேண்டும்
வந்தே பாரத் விரைவு ெரயில் இயக்க வேண்டும்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் பழமையான கோவிலாகும். காசி, ராமேஸ்வரம் சென்றுவர இயலாதவர்கள் வேதாரண்யம் சன்னதி கடலிலும், கோடிக்கரை சேதுக்கடலிலும் தை, ஆடி அமாவாசையில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். கோடியக்கரை சரணாலயம் ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் ஆன்மிக சுற்றுலாவாக காசிக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக காவிரி கடைமடை பகுதியிலிருந்தும் மூத்தகுடிமக்கள் அதிக அளவில் வாரணாசி சென்று வருகின்றனர். ஆனால் வேதாரண்யத்தில் இருந்து குறைந்த செலவில் காசிக்கு செல்ல நேரடி விரைவு ெரயில் இயக்கப்படவில்லை. இதேபோல் திருத்துறைப்பூண்டியில் இருந்தும் காசிக்கு விரைவு ரெயில் இயக்கப்படவில்லை. எனவே பயணிகளின் நலன் கருதி வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி வழியாக காசிக்கு வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் இடையூர் மணிமாறன் ஆகியோர் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.