கமல்ஹாசனை தோற்கடித்த பெண் சிங்கம் வானதி சீனிவாசன் - மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி
தேர்தல் போரில் கமல்ஹாசனை தோற்கடித்த வானதி ஒரு பெண் சிங்கம் என்று மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி கூறினார்.;
கோவை,
கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுதிய 'தடையொன்றுமில்லை' என்ற புத்தகம் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது.
இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மந்திரிகள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது பேசிய ஸ்மிருதி இராணி, தேர்தல் போரில் கமல்ஹாசனை தோற்கடித்த வானதி ஒரு பெண் சிங்கம் என்று தெரிவித்தார். மேலும் தான் ஒரு விவாத நிகழ்ச்சியில் கமலுடன் கலந்துகொண்டதாகவும், அதில் அவரை தோற்கடித்ததாகவும் ஸ்மிருதி இராணி நினைவு கூர்ந்தார்.