தருவைகுளத்தில்வனாமி இறால் வளர்ப்பு பயிற்சி

தருவைகுளத்தில்வனாமி இறால் வளர்ப்பு பயிற்சி நடந்தது.

Update: 2023-08-27 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பண்ணையில் வனாமி இறால் வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியில் 40 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவு விழாவில் உதவி பேராசிரியர் விஜய் அமிர்தராஜ் வரவேற்று பேசினார். மீன்வளக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் தலைமை தாங்கி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது, இந்தியாவில் இறால் உற்பத்தி மற்றும் அதன் வாயிலாக அதிக வருவாய் பெறப்படுகிறது. இறால் வளர்ப்பு சிறந்த லாபம் கொடுக்க கூடிய தொழில் என்று கூறினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சா.ஆதித்தன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்