வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம்

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.;

Update: 2023-05-02 19:54 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருநாளான நேற்று காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ரதவீதிகளில் தேர் சென்று மாலை 5 மணிக்கு நிலையம் வந்ததடைந்தது. தேரோட்டத்தில் நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்