சரக்குவேன் மோதி டீ மாஸ்டர் பலி
திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்குவேன் மோதி டீ மாஸ்டர் உயிரிழந்தார்.;
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்குவேன் மோதி டீ மாஸ்டர் உயிரிழந்தார்.
டீ மாஸ்டர்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ரெங்கநாதபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது58). இவர் பூதலூர் 4 சாலை சந்திப்பில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார்.சம்பவத்தன்று சீனிவாசன் தனது ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பூதலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். விண்ணமங்கலம் பெருமாள் கோவில் அருகில் வந்து கொண்டு இருந்த போது பின்னால் வந்த சரக்கு வேன் சீனிவாசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் படுகாயமடைந்த சீனிவாசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சீனிவாசன் மகன் கார்த்திக் (35) திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.