தென்னைநார் ஏற்றி சென்ற வேன் தீப்பிடித்தது

Update: 2022-08-10 15:59 GMT


நத்தக்காடையூரிலிருந்து தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று மாலை 5 மணிக்கு அக்கரைபாளையத்திலிருந்து மூலனூர் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது தென்னை நார் மீது மின்சார கம்பி உரசியதில் தெனனை நார் திடீரென்று தீப்பிடிக்க தொடங்கியது. இதை அறிந்த வேன் டிரைவர் வேனை நிறுத்திவிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்