வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் வசித்து வருபவர் வீரமணி மகன் கவியரசன்(வயது 26). சரக்கு வேன் டிரைவரான இவர் நேற்று வீட்டிற்கு அருகே உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.