ஏலகிரி மலையில் பாறை மீது வேன் மோதி விபத்து

ஏலகிரி மலையில் 5-வது கொண்டை ஊசி வளைவில் பாறை மீது வேன் மோதி விபத்துகுள்ளானது.

Update: 2023-10-18 17:10 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை, அத்தனாவூர் பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிறுவனத்தில் இருந்து வேனில் 40 மூட்டை சாமையை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு சென்றது.

ஏலகிரி மலையில் உள்ள 5-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடிக்காததால் திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவர் திருமலை (வயது 28) சாலையின் அருகே உள்ள பாறை மீது மோதி சாதுரியமாக வேனை நிறுத்தினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வேனை அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து சாமை மூட்டைகளை மாற்று வாகனத்தில் ஏற்றி திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்