வள்ளியூர் யூனியன் கூட்டம்

வள்ளியூர் யூனியன் கூட்டம் நடந்தது.;

Update: 2022-11-10 19:27 GMT

வள்ளியூர்:

வள்ளியின் யூனியன் கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் வள்ளியூர் யூனியனுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாகவும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், கவுன்சிலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் செண்பகவள்ளி, சபரிகாந்த், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ராஜ்குமார், மலர்விழி, செல்வம், ரமிலா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்