வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடந்தது. யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாகவும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், கவுன்சிலர்கள் ரைகானா ஜாவித், பிலிப்ஸ், பொன்குமார், டெல்சி ஒபிலியா, அலெக்ஸ் பால் கொசிஐின், ஜெயா, மகாலட்சுமி, பாண்டித்துரை, சாரதா, ஜெயலட்சுமி, அனிதா, அஜந்தா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.