திண்டுக்கல் கோர்ட்டில் வாலிபர் சரண்
பரமக்குடி அருகே 4 ேபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரியமங்கலத்தில் மணிகண்டன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியை சேர்ந்த பழனிகுமார், வழிவிட்டான், அழகுமுருகன், முத்துமுருகன் ஆகியோர் ராமநாதபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கையெழுத்திட்டு வந்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 பேரும் கையெழுத்திட்டு விட்டு, ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு பஸ்சில் சென்றனர். அந்த பஸ் பரமக்குடி அருகே சென்ற போது ஒரு கும்பல் பஸ்சை வழிமறித்தது. பின்னர் பஸ்சில் பயணம் செய்த 4 பேரையும் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டது.
இந்த வழக்கில் மதுரை சின்ன அனுப்பானடியை சேர்ந்த சபா என்ற சபாரத்தினம் (வயது 32) என்பவரை பரமக்குடி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சபாரத்தினம் திண்டுக்கல் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை 27-ந்தேதி வரை சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ரெங்கராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.