கழுகுமலை அருகே வளனார் கல்லூயில்கருத்தரங்கம்
கழுகுமலை அருகே வளனார் கல்லூயில் கருத்தரங்கம் நடைபெற்றது.;
கழுகுமலை:
கழுகுமலை அருகேயுள்ள வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'திசைகள் உன்னை திரும்பி பார்க்கும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் காசிராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜோசப் கென்னடி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முரளி கலந்து கொண்டு 'திசைகள் உன்னை திரும்பிபார்க்கும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கஸ்தூரி, பேராசிரியர்கள் மணிகண்டன், அய்யனகுமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.