வாலாம்புரி காளியம்மன் கோவில் திருவிழா
பொறையாறு ராஜீவ்புரத்தில் வாலாம்புரி காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;
பொறையாறு:
பொறையாறு ராஜீவ்புரத்தில் உள்ள வாலாம்புரி காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த வாரம் கோவில் வளாகத்தில் பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு காப்பு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்யும் வகையில் விரதம் இருந்து மஞ்சள் உடை அணிந்து பொறையாறு கச்சேரி காளியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பால்குடமும், ஆண்கள் அழகு காவடியும் எடுத்து சென்றனர். பின்னர் வாலாம்புரி காளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.