'பின்னோரை முன்னேற்ற.. முன்னோரைப் பின்பற்று' - அமைச்சர் உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை,
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும், திரைபிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "தெளிவாய் உள்ளது கொள்கை.. திடமாய் உள்ளது இயக்கம்.. ஒளியாய் உள்ளது பாதை.. உழைப்பதுதான் உன் வேலை. பின்னோரை முன்னேற்ற, முன்னோரைப் பின்பற்று.. உதயநிதிக்கு இதய வாழ்த்து" என்று பதிவிட்டுள்ளார்.