வைகை நதி ஆரத்தி பூஜை வழிபாடு - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாமி தரிசனம்
மதுரையில் நடந்த வைகை நதி ஆரத்தி பூஜை வழிபாட்டில் முன்னாள் அமைச்சர் அதிமுக செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
மதுரை,
மதுரையில் நடந்த வைகை நதி ஆரத்தி பூஜை வழிபாட்டில் முன்னாள் அமைச்சர் அதிமுக செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். மதுரை வைகை நதி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் வைகை நதி ஆரத்தி வழிபாடு பூஜை சிம்மக்கல் கல்பாலம் மத்தியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுத்து இருபுறமும் 11 கிலோ மீட்டர் விரைவு சாலை அமைப்பதற்கு அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு ஒருபகுதி நிறைவைடந்ததாக தெரிவித்தார்.
இதனால் நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாகவும் மீதமுள்ள பணிகளை முடிக்காமல் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.