பாலவீர ஆஞ்சநேயருக்கு வடமாலை
திருப்புவனத்தில் பாலவீர ஆஞ்சநேயருக்கு வடமாலை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.;
ிருப்புவனம்,
திருப்புவனத்தில் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள பாலவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. வெற்றிலை மாலை, துளசி மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு 1501 வடைகளுடன் மாலைகள் சாத்தப்பட்டது. அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள்-ஆண்டாளுக்கு பூஜை நடைபெற்ற பின்பு பாலவீர ஆஞ்சநேயருக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.