வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் - கோவையில் நாளை மது விற்பனைக்கு தடை
கோவையில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை,
தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகள் மற்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு வடலூர் ராமலிங்கர் நினைவு நாளன்று அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான பிப்ரவரி 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.