மெகா முகாமில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

குமரியில் மெகா முகாமில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Update: 2022-09-04 15:03 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 37-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று மாவட்டம் முழுவதும் நடந்தது. 415 மருத்துவக் குழுவினர் மூலம் 1660 இடங்களில் இந்த முகாம் நடந்தது. முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. நாகர்கோவிலில் வடிவீஸ்வரம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், தொல்லவிளை உள்ளிட்ட 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

இதுதவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், வேப்பமூடு மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. சுகாதார பணியாளர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் செலுத்திக் கொள்ளாதவர்கள், பூஸ்டஸ் டோஸ் செலுத்தாதவர்கள் விவரங்களை சேகரித்து அவர்களின் வீடு, வீடாகச் சென்றும் தடுப்பூசி்போட்டனர். நேற்று நடந்த முகாமில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்காக ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்தனர். நேற்று ஒரே நாளில் இந்த முகாமில் 25 ஆயிரத்து 169 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


-

Tags:    

மேலும் செய்திகள்