கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கொல்லங்குடி கால்நடை மருந்தகம் சார்பில் மேப்பல் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
காளையார்கோவில்
கொல்லங்குடி கால்நடை மருந்தகம் சார்பில் மேப்பல் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கோடைகாலங்களிலும், மழை காலங்களிலும் மாடுகளுக்கு பரவும் வாய் காணை, கால் காணை நோயிலிருந்து தடுப்பதற்காக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமில் கொல்லங்குடி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ரஹமத், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பாண்டியன், ஆவின் காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி சிகிச்சை அளித்தனர்.
முகாமிற்கு சென்னை மண்டல கால்நடை நோய் மைய உதவி இயக்குனர் மருத்துவர் ராஜாராம், சிவகங்கை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோமாரி நோய் தடுப்பூசியை ஆய்வு செய்தனர்.