மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட உசிலம்பட்டி, தேனி டிக்கெட் முன்பதிவு மைய நேரம் மாற்றம்
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட உசிலம்பட்டி, தேனி டிக்கெட் முன்பதிவு மைய நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது;
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட தேனி, உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி ரெயில்வே முன்பதிவு மையங்களின் நேரம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டியில் உள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை(வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் செயல்படும்.
இதில் தேனி முன்பதிவு மையம் 6-ந் தேதிக்கு பின்னர், காலை 8 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும். உசிலம்பட்டி, ஆண்டிபட்டி முன்பதிவு மையம் காலை 8 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் செயல்படும்.