கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெரம்பலூரில் உறியடி திருவிழா நடைபெற்றது. மேலும், இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறினர்.

Update: 2023-09-07 19:06 GMT

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள நவநீத கிருஷ்ணர் நேற்று காலை எடத்தெரு ராஜகோபால சுவாமி பஜனை மடத்தில் எழுந்தருளினார். பின்னர் வெண்ணைத்தாழி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையடுத்து மாலை 5 மணியளவில் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உறியடி திருவிழா நடைபெற்றது. பின்னர் எடத்தெரு பகுதியில் சுற்றிலும் பல்வேறு இடங்களில் உறியடி திருவிழா நடைபெற்றது.

உறியடி, வழுக்கு மரம்

அப்போது உறியடிப்பவர் மீது மஞ்சள் பொடி கலந்த தண்ணீரை பக்தர்கள் ஊற்றினர். அதனை மீறி உறியடிப்பவர் கம்பால் பானையை அடித்து உடைத்தார். அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் மதனகோபாலசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் போட்டி போட்டு வழுக்கு மரத்தில் ஏறினர். பின்னர் வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்