உறியடி உற்சவம்

பாளையங்கோட்டையில் உறியடி உற்சவம் நடைபெற்றது

Update: 2022-09-03 21:39 GMT

பகவான் கிருஷ்ணர் அவதார தினம் ஆவணி ரோகிணி நட்சத்திரத்தில் நாடு முமுவதும் நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ராமசுவாமி கோவிலில் உறியடி உற்சவம் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலையில் வேணு கோபாலன், கண்ணன் சிலைகள் அலங்காிக்கப்பட்டு பால், தயிா், வெண்ணெய், அப்பம், சீடை, முறுக்கு, அதிரசம் போன்ற வகைகள் மண்பாண்டங்களில் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் குழந்தைகளுக்கு கிருஷ்ணா், ராதை வேடம் அணிந்து கோலாட்டத்துடன் பஜனை பாடல்கள் பாடியும் ஆடியும் மகிழ்ந்தனா். அதை தொடரந்து கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளில் ஊா்வலமாக சென்றனர். பின்னர் மனித பிரமிடு உறியடி உற்சவம் நடைபெற்றது. கோவிலின் முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான இளைஞா்கள் கலந்துகொண்டு வழுக்குமரம் ஏறினா். பக்தா்கள் ஆரவாரத்துடன் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனா். வழுக்கு மரம் ஏறியதும் அதில் கட்டியிருந்த பாிசு பொருட்கள் வந்திருந்த மக்கள் மத்தியில் வீசப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதமாக அப்பம், சீடை, முறுக்கு, அதிரசம் போன்றவை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்